பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கம் ஊடாகவே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொது மக்களை தவறாக வழிநடத்தியுள்ளாரா என கோப் குழு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.