பண்டாரகம – பாணந்துறை வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் நேற்று வியாழக்கிழமை நெஞ்சுருகும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அவதாவது, சுகயீனமடைந்த தங்களது குழந்தையினை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல எரிபொருள் இல்லாத நிலையில், குழந்தையின் பெற்றோர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த புகைப்படம் பலரையும் கவலையடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையில் எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால், எரிபொருள் வரும் வரை குழந்தையின் பெற்றோர் அங்கு காத்திருந்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





