தமிழக மக்களிடம் வடமாகாண கடற்றொழிலாளர் சமூகத்தினர் விசேட கோரிக்கை!

இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதனை நிறுத்துமாறு கோரி வட மாகாண தமிழ் கடற்தொழிலார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்து இன்றைய தினம் இந்திய துணைத்தூதகரத்துக்கு மகஜர் ஒன்றினை சமர்ப்பிப்பதற்காக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் .

இதனை அடுத்தது ,இது தொடர்பாக யாழ்.கடற்தொழிலார்கள் சமாசனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னரசா ஊடகங்களுக்கு கறுத்தது தெரிவித்திருந்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இந்தியாவின் கடற்படகுகள் அத்துமீறி எமது கடல் வளங்களையும் மீனவர்களின் உடைமைகளையும் நாசம் செய்து வருகின்றனர் .இவற்றுக்கு இதுவரையிலும் இந்திய,மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் நஸ்ட ஈடு வழங்கப்படவில்லை ,தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றோம் .எனவே இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பகுதிக்குள் வருவதை முற்றாகத் நிறுத்த வேண்டும் என்று இந்திய முதலமைச்சர் ஸ்டார்லினுக்கு மகஜர் ஒன்றினை சமர்பித்திருக்கின்றோம்

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் கடற்றொழிலாளர்கள் 2009 ம் ஆண்டிற்கு பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப கடுமையாக முயற்சி எடுத்துவருகின்ற வேளையில் பல தோல்விகளையும் , சவால்களையும் தொடர்ச்சியாக சந்தித்துகொண்டும் இருகின்றோம் .

இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வாழ்வாதார செயற்பாடுகளில் எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணையையும் , டீசலும் கிடைக்காமல் கடற்றொழிலாளர்களால் கடலுக்கு செல்லமுடியவில்லை .

இதனால் எம்மை நம்பி தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன வருமானம் இன்றி பொருட்களின் விலை அதிகரிப்பால் பல கடற்றொழில் குடும்பங்கள் உணவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மூன்றுவேளை உணவுகூட கிடைக்காத நிலையில் உள்ளனர் . இதனால் சிறுவர்களுக்கும் போஷாக்கான உணவு கிடைப்பதில்லை

இந்திய இழுவைப்படகுகள் வழங்களை அழிக்கும் சட்டவிரோத தொழிலை எமது கடற்கரை வரை வந்து மீன்பிடித்து செல்வதால் வரலாற்று ரீதியாக மீன் வளம் , வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்களின் இழப்பை எமது வடமாகாண கடற்றொழில் சமூகம் சந்தித்துவருகிறது .

தற்போது ஏற்பட்டுள்ள உணவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் இந்திய விசைப்படகுகள் எமது வளங்களை சுரண்டிச்செல்வது என்பது மனிதாபிமானமற்ற செயல் ஆகும் .

இதனால் நாம் தமிழ் நாட்டு மக்களை , கடற்றொழிலாளர்களை மற்றும் முதலமைச்சரை இந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ள எமது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மேலும் பாதிக்கின்ற இந்த விசைப்படகு சட்டவிரோத தொழிலை நிறுத்தி பிரச்சினையை தீர்த்துவைத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply