
யாழ் நகரில் சைக்கிள் திருட்டு தொடர்பில் யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
யாழ் நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்றைய தினம் யாழ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.





