சமூகத்தின் தாகம் தீர்க்கும் நற்பணியின் இன்னுமொரு கட்டம்! (படங்கள் இணைப்பு)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.

எரிபொருள் வழங்கும் தினங்களில் கூட வெயிலில் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வெயில் துன்பப்படும் எமது மக்களுக்காக, ‘சமூகம் மீடியா’வின் தாகம் தீர்க்கும் நற்பணி, யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் கிருபா லேர்ணஸின் நிதி அனுசரணையில், ‘சமூகம் மீடியா’வின் ஆதரவுடன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply