அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை

அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான காலங்களில் பொறுமையுடன் செயற்படுமாறும், சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அனைத்து பொறுப்புள்ள குடிமக்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு வன்முறைச் செயலிலும் ஈடுபடும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாயகத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Leave a Reply