பலவீனமானவர் என்பதை கோட்டா மீண்டும் உறுதிப்படுத்தி விட்டார்! – ஓமல்பே தேரர்

நாட்டு மக்கள் நாளையதினம் ஒன்று திரள வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

தான் ஒரு பலவீனமான ஜனாதிபதி என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஊரடங்கு சட்டத்தின் ஊடாக பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் நாளை ஒன்று திரள வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply