கோட்டா கோ கம ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹரிண்!

எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக “கோட்டா கோ கம” வளாகத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நான் வெறுக்கிறேன் மற்றும் வன்மையாக கண்டிக்கிறேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன், வரவிருக்கும் பேரழிவைத் தோற்கடிப்பதற்காக, யாரையும் காப்பாற்றுவதற்காக அல்ல.

வரவிருக்கும் பேரழிவை தோற்கடிக்கும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தை வெல்வதில் ஒன்றுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply