வழமைக்குத் திரும்பும் ரயில் சேவை

கொழும்பு, ஜுலை 9

ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையிலிருந்து இன்றைய தினம் (09) எந்தவொரு ரயில் சேவையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களத்தால் நேற்று (08) அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply