கண்டி புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒண்றினைந்து இன்றையதினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு கொழும்பு தயாராகி வரும் நிலையில் சற்றுமுன் கண்டி புகையிரத நிலையத்தில் பதற்றமான நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி புகையிரத நிலையத்தில் தற்போது புகையிரதங்கள் இல்லாததால் அங்கு வருகை தந்த பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் பதற்றமான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply