மின்சார துண்டிப்பு தொடர்பான நேர விபரம் !

இன்று (09) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும், நாளையும், 13ம் திகதியும் காலை 10.20 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஜூலை 11, 12, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மதியம் 1.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் மின்வெட்டு இருக்காது.

கொழும்பின் வர்த்தக நகரப் பகுதியில் காலை 6.00 மணி முதல் காலை 8.50 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

மேலும், முதலீட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் வளையங்களை காலை 5:30 மணி முதல் 8:50 மணி வரை 03 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *