அதி உச்சக்கட்ட பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகம்!

அரசாங்கத்திற்கு எதிராக இன்றையதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியிலும் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் தற்போது பங்கெடுத்துள்ளனர்.

இதனை யடுத்து ஜனாதிபதி செயலக வளாகத்தை சுற்றி ஏராளமான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியில் தற்போது பரபரப்பான நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply