ஆர்ப்பாட்டக்காரர்கள் புறப்பட்ட ரயிலுக்குரிய முழுக்கட்டணத்தையும் தனியொருவராக செலுத்திய வியாபாரி

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலுக்குரிய முழுக்கட்டணத்தையும் வியாபாரி ஒருவர் தனியாக செலுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் பாரிய அரச எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில், மக்கள் காலிமுகத்திடல் பேராட்டக்களத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்டி மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கி இரு ரயில்கள் புறப்பட்டுள்ளன.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலுக்குரிய முழுக்கட்டணத்தையும் ஒரு வியாபாரி தனியாக செலுத்தியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என மக்கள் கடுமையாக வலியுறுத்தியதை தொடர்ந்து கண்டி, காலி, அவிசாவளை, அநுராதபுரம், மாத்தறை ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply