கொழும்பில் பரபரப்பு;கோட்டாவின் இல்லத்தில் தடல் புடல் விருந்து!(படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்றையதினம் பல்வேறு அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு தரப்பினரின் அதி உச்ச பாதுகாப்பு வேலிகளையும் தகர்த்து ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளே போராட்ட காரர்கள் நுழைந்ததுடன் அங்குள்ள நீச்சல் தடாகங்களில் குதித்து நீராடிய காட்சிகள் வெளியாகியது.

அதேவேளை ஜனாதிபதி செயலகத்தின் சமையலறைக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்டு மகிழ்ந்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply