இலங்கை மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி கொழும்பில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில் நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் மக்களிடம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply