பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது துண்டிக்கப்பட்ட மின்சாரம்! – விசாரணை ஆரம்பம்

நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது பிரதமரின் வீடு அமைந்துள்ள பகுதி மற்றும் அந்த பகுதியைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த சமயத்தில் திட்டமிடப்பட்ட வகையில் மின்வெட்டு எதுவும் இல்லை என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், அந்த நேரத்தில் மின்சாரம் எப்படி துண்டிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் PUCSL தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply