வயல் காவலில் இருந்த விவசாயி யானை தாக்கி பலி

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருநூறுவில் – உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கருணாகரன் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து கண்டியனாறு பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பராமரித்து காவலில் இருந்த போது திடீரென வயலினுள் நுளைந்த காட்டு யானை குறித்த நபரினை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில், அயலில் உள்ள வயல் காவலில் இருந்த விவசாயிகளால் மீட்டெடுத்து தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply