எரிபொருள் தீர்ந்து நடுவீதியில் நின்ற இ.போ.ச.பேருந்து! பயணிகள் அசௌகரியம்

கந்தளாய் ஊடான பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று எரிபொருள் தீர்ந்து போனதால் வீதியில் பயணிகளுடன் நின்ற சம்பவம் ஒன்று நேற்று காலை இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் கிண்ணியா சாலைக்கு சொந்தமான பேரூந்தே இவ்வாறு டீசல் தீர்ந்து போனதால், கந்தளாயில் இருந்து கிண்ணியா நோக்கி பயணிக்கையில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் பயணிகளை ஏற்றியவாறு நின்றுள்ளது.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு நிலையே இதற்கான காரணமாகும் என தெரியவருகிறது.

மீண்டும் கிண்ணியா பஸ் டிப்போவில் இருந்து டீசல் பெறப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து பயணிகள் காத்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply