ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளரின் அறிக்கை

கொழும்பு,ஜுலை 10

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும் கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் அழைக்கிறோம்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண வழிவகை செய்து இயல்பு நிலைக்கு திரும்புவது அனைத்து கட்சி தலைவர்களின் பொறுப்பாகும்.

இலங்கையின் சனத்தொகைக்கான தனது ஆதரவை மேலும் அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் தெரிவுகளை மதிப்பீடு செய்து வருகிறது

Leave a Reply