மருதமுனைக் கடலில் மூழ்கிய மாணவனை தெய்வாதீனமாகக் காப்பாற்றிய நபர்!

மருதமுனைக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் மாணவன் ஒருவன் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 05.45 மணியளவில் மருதமுனைக் கடற்கரையில் நண்பர்களோடு விளையாடிய ஒரு குழு பின்னர் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இடையில் இதில் ஒரு மாணவன் நீரில் மூழ்கிக்கொண்டிருந்ததை அவதானித்த ஏனைய நண்பர்கள் அவரைக்காப்பாற்றுமாறு கூக்குரலிட்டு கரையில் உள்ளவர்களை அழைத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வீதியால் தனது கைக் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த மருதமுனைப்பிரதேசத்தில் நன்கு அறியப்பட்ட கிழங்குக்கடை .ஐ.சாபி சமீம் தனது குழந்தையை வீதியில் நின்றவர்களிடம் கொடுத்து விட்டு கடலுக்குல் சென்று தனது உயிரைத்துச்சமாக மதித்து போராட்டத்திற்கு மத்தியில் அம்மாணவனைக் காப்பாற்றி மீட்டெடுத்து கரைக்குக்கொண்டு வந்து சேர்த்தார்.

இவரின் துனிச்சலான இச்செயலால் இம்மாணவனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது.

உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு மாணவனின் உயிரைக்காப்பாற்றியமைக்காக இவருக்கான பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply