பின்கதவால் தப்பி ஓடிய கோட்டா

போராட்டத்தை கணக்கில் எடுக்காமால் ,பதவிக்கு ஆசைப்பட்ட கோட்டபாயவுக்கு, மக்கள் தற்போது தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காது, பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து பின்கதவால் செல்ல நேர்ந்தது.

இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, கோட்டாபய ராஜபக்ஸவின் இராணுவ பலத்துக்கு மேலாக மக்கள் பலம் என்பது பிரபலமானது முக்கியமானது என்பதை நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளனர்.

ராஜபகஷர்களின் ஏகாதிபத்திய போக்கு இந்த மக்கள் எழுச்சியுடன் நிறைவுக்கு வருகின்றது என்றார்.

Leave a Reply