நாளை முதல் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு

நாளை முதல் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.

நாளுக்கு நாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply