நஞ்சற்ற உற்பத்திக்காக விவசாயிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பேரமடு கிராமத்தில் 9 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட இரு விவசாய கிணறுகள் நேற்று(9) கையளிக்கப்பட்டதோடு, சேதனப் பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட சமுதாய சந்தையும் திறந்துவைக்கப்பட்டது.

அகம் மனிதாபிமான நிலையத்தால் இந்தக் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதன்போது மேலும் இரு நீர் இறைக்கும் இயந்திரங்களும் வியாபாரிகளுக்கான துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள, கந்தளாய் பிரதேச செயலாளர், பேர மடுவ அரலிய மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அகம் மனிதாபிமானம் வள நிலைய பணிப்பாளர் கருத்து தெரியவருகையில்,

நிலையான உணவைப் பெறுவதற்கான வாழ்வாதார திட்டம் என்ற தொனிப்பொருளில் பல்வேறு வேலைத்திட்டங்களை இந்த மாவட்டத்தில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் செய்து வருகின்றோம்.

மருதமுனைக் கடலில் மூழ்கிய மாணவனை தெய்வாதீனமாகக் காப்பாற்றிய நபர்!

மாவட்டச் செயலாளரின்அனுமதியுடன், இம்முறை 11 மில்லியன் ரூபா செலவில் இந்த மாவட்டம் முழுவதும் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை செய்ய முன் வந்திருக்கின்றோம்.

இதற்காக 125 பெண்களை தெரிவு செய்து இருக்கிறோம். இதில் விசேட தேவையுடைய பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்கள் சுய தொழில் ஆர்வம் உள்ள பெண்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் 15 விவசாயக் கிணறுகள், 15 நீரிறைக்கும் இயந்திரங்கள், 25 வியாபார சைக்கிள்கள், பிரதேசத்திற்கு பொறுத்தமான விதைகள் மற்றும் இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் போன்றவைகள் உள்ளடக்கியிருக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறான விவசாய கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும்போது, உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டு, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என திருகோணமலை மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக மக்களுடைய குறித்த தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இருப்பினும் அரசாங்கத்துடன் இணைந்து அரசசார்பற்ற நிறுவனங்களும் மக்களுடைய குறித்த வசதிகளை மேம்படுத்தி கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இந்த வகையில் அகம் மனிதாபிமான வள நிலையம் இந்தக் கிராமத்தை தெரிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி கிராமிய மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்திலும் இச்செயற்றிட்டங்கள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 30 இலட்சம் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இதன் மூலம் கிராமிய மக்கள் தங்களுக்குத் தேவையான தொழில் துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply