தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒன்றுபடுங்கள்- ஆறு.திருமுருகன் விசேட கோரிக்கை!

தமிழ்மக்களின் அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடித் தீர்வை முன்வையுங்கள் என்று தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு , திருமுருகன் வலியுறுத்தியுள்ளார் .

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் நாம் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வாருங்கள் .

வடக்கு – கிழக்கு , மலையகம் , தெற்கு தமிழ் நாடாளுமன்ற அக்கத்தவர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது . எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள்.

இது காலத்தின் கட்டாயம் . இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுக் கவறாகும் எங்களுக்குள் பலவாய் பிரிந்து வெறுங்கையோடு நின்று இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.எங்களுக்குள் பலவாய் பிரிந்து வெறுங்கையோடு நின்ற வரலாற்றை மாற்றி , பொருத்தமான தீர்மானங்களை எடுக்க ஆயத்தமாகுங்கள்.

ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் எவருடனும் பெறுமதியான தீர்மானத்தை முன் வைப்பதற்கு ஒன்று கூடுங்கள் . உங்களை மக்கள் மிக அவதானத்தோடு காத்திருக்கிறார்கள் .

இன்று ஒன்றுபடாவிடில் என்றும் உங்களால் பயன் கிட்டுவது எளிதல்ல . தமிழ் மக்கள் சார்பில் எந்த அரசியலும் இல்லாத பொது மகனாக இவ்வேண்டுகோளை விடுகிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply