யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு

<!–

யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு – Athavan News

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டில் வாள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

இதன்போது, வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 18 வயதான சந்தேநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Leave a Reply