இலங்கையின் உள்ள பல அரச நிறுவனங்களில், முகக்கவச விற்பனையில் நடக்கும் மோசடி தொடர்பில், அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் விடயத்தை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் மூலமாக விநியோகிக்கப்படும் ஒவ்வொரு முகக்கவசத்திற்கும் இரண்டு ரூபாய் நிதி வரவு வைத்து அதில் மோசடி செய்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவச மோசடி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


