அனுராதபுரம், நுவரவாவிக்கு அருகில், புதையல் தோண்டியதனூடாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலையொன்றை 60 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 22 கிலோகிராம் புத்தர் சிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
மிஹிந்தலை, கஹட்டகஸ்திகலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40, 43, 45 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இன்று அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


