அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று கொழும்பு துறை முகத்தை வந்தடையவுள்ளது.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 இங்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


