தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி பொருட்களின் விலையை அதிகரிக்க முடிந்தால், ஒரு நாட்டிற்கு அரசாங்கம் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துள்ளது.
நிறுவனங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து பால்மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விலை அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கினால் இத்தகையதொரு அரசாங்கமும் ஆட்சியும் நாட்டிற்கு தேவையில்லை என அவர் தெரிவித்தார்.


