மீரிகம பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மீரிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வோட்டர் ஜெல் குச்சிகள் 81, அமேனியா நைட்ரேட் 75 கிராம், டெட்டனேடர் 107 மற்றும் மேலும் பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


