வீட்டில் திருட சென்ற கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பெண்

மல்வத்துஹிரிபிட்டி – பிடுவல்கொலட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி கொள்ளையிடுவதற்காக நுழைந்த இருவர், வீட்டிலிருந்த பெண்கள் இருவரை தாக்கியதில் இரு பெண்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

பிட்டுவல்கொட, யக்கல பிரதேசத்தை சேர்ந்த 77 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிற்குள் நுழைந்து தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதலில் பலவீனமாகியிருந்த பெண்ணை உடனடியாக மீட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

எனினும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply