யாழில் 18 வயது இளைஞன் வாள்களுடன் கைது!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில், வீடொன்றில் இருந்து இரண்டு வாள்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளமையுடன், 18 வயதான இளைஞன் ஒருவரையும்; பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply