மீரிஹான – கிம்புலாவல கழிவு நீரோடையிலிருந்து, நபரொருவரின் சடலம் நேற்று (9) மாலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து, மீரிஹான பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.
40 வயதினை உடைய குறித்த நபரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கழிவுநீரோடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்து, மீரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


