முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்து!

பண்டாரகம, கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல, நரிகந்த பாலத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியமையுடன் முச்சக்கரவண்டி முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

முச்சக்கரவண்டியை கவனயீனமாக செலுத்தியதே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply