மக்களை வரிசையில் நிறுத்தி அழக்களிப்பதை விட பொருட்களின் விலையை அதிகரித்து பொருட்களை வழங்குவது சிறந்தது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சியினர் மக்களை வரிசையில் நிற்கவைத்து அலைகளிக்கவே விரும்புகின்றனர். அப்போது தான் ஆளுங்கட்சியை இலகுவாக விமர்சிக்க முடியும்.
எதிர்கட்சிக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை. இதனாலேயே பொருட்களின் விலை அதிகரிப்பை வைத்து அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்காக மக்களை வரிசையில் நிற்க வைத்து கஸ்டபடுத்தக் கூடாது என்ற மக்களின் மீது கொண்ட அக்கறையினாலேயே கட்டுபாட்டு விலையை நீக்கி பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


