தீயுடன் சங்கமமான மாப்பாண முதலியாரின் சடலம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மாப்பாண முதலியாரின் இறுதி கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

அவருடைய இறுதி சடங்கில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாப்பாண முதலியாரின் பூதவுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது

Leave a Reply