விரக்தியடைந்த நிலையில் தான் இருப்பதாகவும் தனக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எப்போதும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே பணியாற்றியுள்ளேன். எப்போதும் கட்சித் தலைவருடன் இருந்ததால் அவருக்கும் ஒரு பதவி வழங்கப்பட வேண்டும்.
எனினும், தற்போது இருக்கும் நிலைமையை எப்படித் தீர்ப்பது என்று தனக்குத் தெரிவில்லை என்றும் தான் விரக்தியடைந்து ஏமாற்றமடைந்தத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


