வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பிலிருந்து முகத்துவாரம் செல்லும் வழியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளினால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply