தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ஒத்திவைப்புத் தொடர்பிலான தகவல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


