கால்வாயில் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கால்வாயில் ஒருவர் விழுத்து உயிரிழந்தார்.

பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று இரவு வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காணாமற்போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply