எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய விற்பனை முகவர்கள்!

நாளை முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என்ற தகவலை தொடர்ந்து ஹட்டன் உட்பட பல நகரங்களில் எரிவாயு விநியோகஸ்தர்கள் தங்கள் கடைகளை மூடி வைத்துள்ளனர்.

நகரத்தில் உள்ள உணவகங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை விற்றுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு போதுமான எரிவாயு தங்களிடம்இல்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்ற நோக்கில் எரிவாயு சிலிண்டர்களின் இருப்பை மறைத்து வைத்திருப்பதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தகைய பதுக்கல் நடவடிக்கையால் பல்வேறு அவதி நிலைக்குள்ளவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply