முகநூல் ஊடுருவல் சர்ச்சை: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடுருவலை மேற்கொண்டு தவறான செய்திகளை பதிவிட்டதாக கூறி சந்தேக நபர் மீது தாக்குல் இடம்பெற்றதாக ஊர்வாகற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவரின் முகநூலை ஊடுருவி அவருக்கு களங்கத்தை ஏற்படும் வகையில் சந்தேகநபர் பதிவை இட்டுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞரும் அவரது நண்பர்கள் மூவரும் முகநூலை ஊடுருவியவரின் இல்லத்திற்கு சென்று இடம்பெற்ற பிரச்சினையை முகநூலை ஊடுருவியதாக சந்தேகப்படும் நபரின் தந்தையிடம் கூறியுள்ளனர்.

தனது மகனிடம் பிழையை எடுத்து கூறி பிரச்சினையை தீர்ப்போம் என தந்தை கூறியுள்ளார். இந்நிலையில் நால்வரும் திரும்பிச்சென்றுள்ளனர்.

மீண்டும் சிறிதுநேரம் கழித்து குறித்த வீட்டிற்கு சென்ற இளைஞனை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில், இளைஞன் சூம் செயலியூடாக கற்கை நெறியொன்றை தொடர்ந்தவேளை அதை இடைநிறுத்தி வெளியில் சென்றுள்ளார்.

குறித்த நால்வரும் முகநூலை எதற்காக ஊடுருவினாய் என்ற தர்கத்தில் ஈடுபட்டமையோடு, முகநூல் ஊடுருவியதாக சந்தேகிக்கபடுவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிசார் நால்வரையும் கைது செய்தமையோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply