மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த ஜனாதிபதி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – விமல் வீரவன்ச

தற்போதைய ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த ஜனாதிபதி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்பார்த்ததைச் செய்யாமல், எதிர்பாராததைச் செய்வதன் மூலம் தற்போதைய ஆட்சியில் மக்களின் நம்பிக்கை பறிபோயுள்ளது.

தற்போது நிகழும் பல்வேறு சம்பவங்களின் மூலமாக ஏற்பட்டுள்ள மக்களின் அவநம்பிக்கை மற்றும் விரக்தியை போக்கி, அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை ஜனாதிபதி விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டிற்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை ஆவணங்களை அமைச்சரவையில் கொண்டு வந்து ஒரே நாளில் முன்மொழிந்து ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply