உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கொரோனாத் தொற்று நோயின் ஆபத்து குறைந்துள்ளது என தவறாக எண்ண வேண்டாம் என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மக்கள் தற்போது, வழிப்பாட்டுத்தலங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகளில் அதிகளவில் ஒன்று கூடிய வருகின்றனர்.
இதுதவறான முன்னுதாரணம். தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளதால், ஆபத்து குறைந்து விடவில்லை. எந்த நேரத்திலும் இந்த நிலைமை மாறக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


