ஆப்பிள் ஐபேட் மினி 6 சார்ஜிங் பிரச்சனைக்கு தீர்வு! (படங்கள் இணைப்பு)

ஆப்பிள் ஐபேட் மினி 6 பயனர்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை சார்ஜிங் தொடர்பானது தான்.

ஐபேட் மினி 6 என்கிற டேப்லெட்டை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் அந்நிறுவனத்தின் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டான ஐபேட்OS 15.5 மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஐபேட் மினி 6 பயனர்களுக்கு இந்த அப்டேட் மூலம் சார்ஜிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஐபேட் OS 15.5 வெர்ஷனுக்கு அப்டேட் செய்த பயனர்கள் ஏராளமானோர் தங்களது ஐபேட் மினி 6ஐ சார்ஜ் செய்ய முடியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

சாப்ட்வேர் பக்கினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய விரைவில் ஐபேட் OS 15.6 பீட்டா வெர்ஷனை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் அதுவரை இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக அதனை ரீபூட் செய்து பயன்படுத்த அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *