அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்குறுதியளித்தபடி புதிய முறையில் தேர்தல்! – ஜனாதிபதி

இலங்கையில் அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்குறுதியளித்தபடி புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அவற்றைக் கட்டப்படுத்த அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக பணியாற்றவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று படைப்பிரிவுகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் கட்டமைப்பை வலுவாக்கியதன் மூலம் தேசியக் கடமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாத அல்லது மதத் தீவிரவாதம் நிகழாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா உட்பட்ட உயர் அதிகாரிகளும் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply