மேலும் 498 பேர் தொற்றிலிருந்து பூரண குணம்!

கொரோனாத் தொற்றில் இருந்து மேலும் 498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 525,663 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,296 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply