வவுனியா, ஓமந்தை பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையைச் சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார
மேலும், நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியின் மறுபக்கமாக திருப்பியுள்ளது.
இதன்போது, வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



