கிளிநொச்சியில் மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு!

கிளிநொச்சியில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு, இன்று கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்த வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a Reply