எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

ஹங்வெல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அருகில் இருந்து எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகோகொட பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை முதல் அந்த விடுதியில் தங்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply